கரூர் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் பல முறைகேடுகள்- மாணவர்கள் குற்றச்சாட்டு

செவ்வாய், 16 மே 2023 (23:21 IST)
கரூர் அரசு கலைக் கல்லூரியில் வேலை செய்த முன்னாள் முதல்வர் கவுசல்யா தேவி அவர்கள் கல்லூரியை கோமா நிலைக்கு கொண்டு விட்டுச் சென்றுள்ளார். இவர் கல்லூரியில் தகுதி இல்லாத நபர்களுக்கு  துறைத் தலைவர் பொறுப்பு வழங்கிவிட்டு சென்றுள்ளார்.

இவர் காலத்தில் 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் மாணவர் சேர்க்கையில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. முன்னாள் முதல்வர் கௌசல்யா தேவி அவர்கள் ஊழல் செய்வதற்கு உறுதுணையாக ஜாகிர் உசேன் அவர்கள் இருந்துள்ளார் என்பதை மாணவர்கள் தெரிவித்தனர். ஏழை எளிய மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரியில் சேரும் மாணவர்களை ஒதுக்கிவிட்டு, பணம் பெற்றுக் கொண்டு பல மாணவர்களை கல்லூரியில் சேர்த்து உள்ளார். இவர் காலத்தில் மூத்த பேராசிரியர்களை வேண்டுமென்றே பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பலி வாங்கி உள்ளார். அவர்களுக்கு கிடைக்க வேண்டி நியாயமான சலுகைகளையும் தடுத்துள்ளார்.

இவரால் கல்லூரியில் பல மாணவர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர். இவர் காலத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பல ஊழல்கள் செய்துள்ளார். கல்லூரியில் விளையாட்டில் பங்கு கொண்டு பல மாணவர்கள் சாதனை புரிந்து வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது உடற்கல்வி இயக்குனர் பொறுப்பு வகிக்கும் பிரபாகரன் அவர்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு OD போட்டு தரவில்லை இதனால் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள்  1000 ரூபாய் செலுத்தியே தேர்வு எழுத உள்ளனர்.

இவர்கள் கல்லூரியில் விளையாட்டை அழிக்க நினைக்கின்றார்கள் இவர்களை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே பிரபாகரன் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தண்டிக்கப்பட்டு அங்கிருந்து கரூர் அரசு கலைக் கல்லூரிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.  கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படை என்ற அமைப்பிலும் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இக் கல்லூரியில் சில ஆசிரியர்கள் வகுப்பிற்கே செல்வது கிடையாது. கல்லூரியில் உள்ள சில பேராசிரியர்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் ஜாதி ரீதியாக மாணவர்களிடம் நடந்து கொள்வது வேதனையாக உள்ளது என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

'கடந்த மூன்று ஆண்டுகளில் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஜாகிர் உசேன் என்ற ஆசிரியர் மீது பல புகார்கள் கொடுத்து உள்ளனர். கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியர் ஜாகிர் உசேன் அவர்கள் மாணவ மாணவிகளின் அடையாள அட்டையை பிடுங்கி கொண்டு இதுவரையும் தரவில்லை என்று மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். அடையாள அட்டை இல்லாமல் நாங்கள் எப்படி தேர்வு எழுத முடியும் என்று மாணவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அந்தப் புகார் மனுக்கள் அனைத்தையும் அலுவலகத்தில் இருந்து முன்னாள் முதல்வர் கௌசல்யா தேவி அவர்கள் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.  கல்லூரி நிர்வாக சம்பந்தப்பட்ட விஷயங்களை எல்லாம் அலுவலகத்தில் உள்ள சிலர் ஜாகிர் உசேன் இடம் சொல்லி விடுகிறார்களாம். தற்போது பதவியேற்றுள்ள புதிய முதல்வர் அவர்கள் மாணவர்களை ஊக்குவித்து கல்லூரியில் ஏற்கனவே நடந்த முறைகேடுகளை எல்லாம் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்' என்று தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்