வெள்ள பாதிப்பா? உதவி செய்யும் விக்கிபீடியா மேப்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (15:30 IST)
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெள்ளம் பாதிக்கப்பட்டு இருக்கும் இடங்களை ‘ஓபன் ஸ்டிரீட் மேப்’ என்ற இணையதளம் பக்கம் மூலம் எளிதாக தெரிந்துக்கொள்ள முடியும்.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று பெய்த கனமழையில் ஒரே நாளில் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பித்துபோனது. இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 
சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விக்கிபீடியா ‘ஓபன் ஸ்டிரீட் மேப்’ என்ற இணையதளம் பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில், சென்னையில் எங்கு எல்லாம் வெள்ளம் இதுவரை சூழ்ந்து உள்ளது என்பதை எளிதாக பார்க்க முடியும்.
 
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகள் பிங்க் நிறத்திலும், மீட்பு முகாம்கள் சிவப்பு நிற புள்ளிகளால் குறிக்கப்பட்டு உள்ளது. இது சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள எல்லா பகுதிகளிக்கும் உதவும். மேலும் இதில் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். இதில் யார் வெண்டுமானாலும் தகவல்களை மாற்றலாம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்