விடிய விடிய பேயாட்டம் ஆடிய மழை: மைசூர் மக்கள் வெள்ளத்தில் தவிப்பு

வியாழன், 28 செப்டம்பர் 2017 (06:29 IST)
சமீபத்தில் பெங்களூரில் கொட்டிய மழை காரணமாக அந்த பகுதி மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில் நேற்று இரவு விடிய விடிய மைசூரில் கொட்டிய மழையால், அந்நகரம் முழுவதும் வெள்ளக்காடாய் உள்ளது. வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்புப்படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர்.



 
 
மைசூரில் உள்ள தாழ்வான பகுதிகளான உதயகிரி, பன்னிமண்டபம், காந்தி நகர், ஊட்டஹள்ளி ஆகிய பகுதிகளில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் உடனடியாக தீயணைப்பு மற்றும் இயற்கை பேரிடர் மீட்பு படையினர் வீடுகளில் இருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.
 
மைசூரில் தற்போது தசரா விழாவையொட்டி மலர்க்கண்காட்சி மற்றும் மைசூரு அரண்மனை எதிரே உள்ள இடத்தில் தசரா கண்காட்சியும், உணவு மேளாவும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கனமழை காரணமாக இந்த கண்காட்சிக்கு பொதுமக்கள் கூட்டம் சுத்தமாக இல்லை என்பது சோகமான விஷயம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்