நாளுக்கு நாள் சைபர் கிரைம் மோசடி அதிகரித்து வரும் நிலையில், அப்பாவிகளை குறி வைத்து சைபர் கிரைம் செய்பவர்கள் ஏராளமான பணத்தை பறித்து வருகிறார்கள். என்பதும் இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறைக்கு தினந்தோறும் ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கேரளாவில் சைபர் கிரைம் துறையில் வேலை செய்யும் அதிகாரி ஒருவருக்கே ஒரு மோசடி கால் வந்துள்ளது. தனது கேமராவை ஆன் செய்யாமல் அவர் அந்த காலை அட்டென்ட் செய்த நிலையில், எதிர்பக்கம் இருந்த போலீஸ் உடையில் இருந்த மோசடிக்காரர் வழக்கம்போல் தனது வேலையை காட்டியுள்ளார்.
தன் கேமரா வேலை செய்யவில்லை என்று போலீஸ் அதிகாரி கூறிய நிலையில், மோசடிக்காரர் மீண்டும் மீண்டும் கேமராவை ஆன் செய்யுமாறு கூறியதை எடுத்து, சைபர் கிரைம் போலீஸ் அல்லது கேமராவை ஆன் செய்தார். அப்போதுதான் தன் வசமாக சிக்கிக் கொண்டதை அடைந்த அந்த மோசடிக்காரர் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது மாதிரி வேலையை செய்யாதீர்கள். உங்களின் முகவரி, நீங்கள் இருக்கும் இடம் எல்லாம் எனக்கு தெரியும். இனிமேல் இது மாதிரி செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று எச்சரித்தார்.