ஜியோ போன் தயாரிப்பை நிறுத்திய ரிலையன்ஸ்? காரணம் என்ன??

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (15:17 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வோல்ட்இ சேவை கொண்ட பீச்சர் போனை தயாரித்து ஆகஸ்ட் மாதம் அதன் விற்பனையை துவங்கியது. 


 
 
இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் கட்ட முன்பதிவை 6 மில்லியன் வாடிக்கையாளர்கல் மேற்கொண்டனர். ஆனால், தற்போது ஜியோ போன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஏர்டெல் நிறுவனம் கார்பன் மற்றும் செல்கான் நிறுவனங்களுடன் இணைந்து இரண்டு 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. 
 
அதேபோல், வோடபோன் நிறுவனமும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பாரத் 2 ஸ்மார்ட்போனினை வெளியிடயுள்ளது.
 
போட்டி நிறுவனங்கள் அனைத்தும் ஸ்மார்போனை வெளியிட்டு வருவதால் ஜியோவும் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாகவும், இதற்காக பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதில் வாட்ஸ் அப், யூடியூப் போன்ற சேவைகள் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்