விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

Siva
வியாழன், 21 நவம்பர் 2024 (17:39 IST)
பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் ஆன்லைன் மூலம் பணத்தை மோசடி செய்ய முயற்சித்த போது சுதாரித்து கொண்டதை  அடுத்து இதுகுறித்து சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் ஆன்லைன் மூலம் பண மோசடி செய்ய முயற்சித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனார் ஆனந்த் (81) கோட்டூரில் வசித்து வருகிறார். அவரை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு, தாங்கள் கர்நாடக போலீசார் என்று  அடையாளப்படுத்திக் கொண்டனர். மேலும், "உங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி கர்நாடகாவில் ஒரு கார் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், அந்த கார் விபத்துக்குள்ளாகி சிலர் மீது மோதியுள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுபட உங்களது வங்கி கணக்கு விவரங்கள் தேவையாகிறது" என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து சுதாரித்த ஆனந்த், உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடி முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

இவ்வாறு தொலைபேசி மூலம் வரும் அழைப்புகளில் ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள் போன்ற எந்த தகவல்களையும் பகிரக்கூடாது என்று காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்