தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் முழு ஊரடங்கின்போது ஆன்லைன் டெலிவரி தடை செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அன்றைய ஒருநாள் மட்டும் அமேசான் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை டெலிவரி செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது]
அதேபோல் உணவுகளை ஆன் டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமைட்டோ நிறுவனங்களுக்கும் டெலிவரி செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதே நேரத்தில் திங்கள் முதல் சனி வரை உணவு கட்டுப்பாட்டு விதி முறைகளை கடைபிடித்து டெலிவரி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது