ராகுல் காந்தி தகுதி நீக்கம் எதிரொலி: நாடு முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டமா?

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (15:59 IST)
ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடும் முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டத்திற்கு நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் வெளியான தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலாளர் அறிவித்திருந்தார். அதுமட்டும் இன்றி அவர் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 
 
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடும் முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 
மேலும் ராகுல் காந்தியின் ஜனநாயக நடவடிக்கையை முடக்குவதற்காக பிரதமர் மோடி செய்துள்ளது சர்வாதிகார அராஜகம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்