கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில்போட்டியிட்டு வெற்றிபெற்ற திருமகன் ஈவேரா மறைவையொட்டி, அத்தொகுதிக்கு பிப்ர்வரி 27 ஆம் தேதி இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
கடந்த 15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமமாக இவர், சென்னையிலுள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மார்ச் 20 ஆம் தேதி கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து, மருத்துமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், லேசான கொரொனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
பின்னர், கொரொனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்த இளங்கோவன், மீண்டும் நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.