ஒன்றரை ஆண்டுக்கு பின் கொரோனாவால் உயிரிழப்பு: காரைக்காலில் பரபரப்பு..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (15:22 IST)
ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் காரைக்காலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் காரைக்காலில் கடந்த நான்கு நாட்களில் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
 
இந்த நிலையில் காரைக்காலில் ஒன்றை ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரைக்கால் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்