நீ எனக்கு மட்டும்தான் சொந்தம் !...தங்கை முறை பெண்ணை கொன்ற கொடூரன்!

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (14:20 IST)
தன்னைக் காதலிக்குமாறு ஒரு கல்லூரி மாணவியை வற்புறுத்திய இளைஞர், நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்! உன்னை வேற யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் என்ற வெறித்தனமான மனநிலையில் அப்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றான். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
நம் நாட்டில் சமீபகாலமாகவே இளைஞர்கள் தன்னைக் காதலிக்காத பெண்ணைக் கொலை செய்வது அதிகரித்துவருகிறது. 
 
திருச்சி தென்னூர் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் மலவிழி. இவர் அங்குள்ள பொறியியல் கல்லூரில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவில் 3 ஆம் ஆண்டு படித்துவந்தார்.
 
இந்நிலையில் சென்னையில் உள்ள ஐஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் பாலம்முரளீ கார்த்தி என்பவர். இவருக்கு திருணமாகி மனைவி குழந்தைகள் உள்ளது. அவர்களைப் பார்பதற்க்காக திருச்சிக்குச் செல்லும் போது மலர்விழி மீது காதல் தோன்றியுள்ளது.அதனால் மலர்விழியிடம் தன்னைக் காதலிக்குமாறு தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
 
மலர்விழி, பாலமுரளிக்கு தங்கை முறை என்பதால் இதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது.
 
இந்நிலையில் நேற்று மாலையில் கல்லூரி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். பி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் பஸ்ஸில் இருந்து வீட்டுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார்.அப்போது   வாலிபர் மலர்விழியிடம் நெருங்கி தன்னை காதலிக்குமாறு தகராறி செய்துள்ளார். இதனை மலர்விழி ஏற்கவில்லை. திருமணத்திற்கு முன்பிருந்தே மலர்விழியை அவர் ஒருதலையாகக் காதலித்ததால் நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்..நீ வேற யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற வெறியில் தன் கையில் இருந்த கத்தியால் குத்தி கொலை செய்தான்.
 
இதனைப்பார்த்த பொதுமக்கள் பாலமுரளியைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  போலீஸார்  பாலமுரளியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்