ஹெல்மெட் போடலன்னா… எல்லாப் போலிஸும் அபராதம் விதிக்கும் – நீதிமன்றம் தடாலடி !

வெள்ளி, 14 ஜூன் 2019 (16:09 IST)
ஹெல்மெட் போடாமல் செல்பவர்களுக்கு இனிமேல் சாலைப் போக்குவரத்து காவலர்கள் மட்டுமின்றி அனைத்து காவல் சப் இன்ஸ்பெக்டர்களும் அபராதம் விதிக்கலாம் என்ற அதிகாரத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இருசக்கரம் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அவ்வப்போது மாநில அரசுக்கு அறிவுறுத்திக்கொண்டே உள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் கண்காணிப்புக் கேமராக்களை போலீஸார் பொருத்தியுள்ளனர். இதில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் மக்களின் வீட்டுக்கே சம்மன் அனுப்பும் திட்டத்தையும் துவங்கியுள்ளனர்.

இதையடுத்து ஹெல்மெட் போடாதவர்களிடம் அபராதம் விதிக்கும் அதிகாரத்தை சாலைப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு மட்டுமில்லாமல் அனைத்து பிரிவு சப் இன்ஸ்பெக்டர்களுக்கும் நீதிமன்றம் வழங்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இனிமேல் ஹெல்மெட் போடாமல் சென்று போலிஸாரிடம் விதிகளைப் பற்றி பேசமுடியாது எனப் பலரும் சமூகவலைதளங்களில் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்