தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை!

J.Durai
புதன், 2 அக்டோபர் 2024 (15:49 IST)
காந்தி ஜெயந்தி விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி கடற்கரைச்சாலையில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு,புதுச்சேரி அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் ஜெயக்குமார், லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார் உள்ளிடோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
 
தொடர்ந்து சர்வமத பிரார்த்தனைகள் மற்றும் தேசபக்தி பாடல்களும் இசைக்கப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயங்கங்களைச் சேர்ந்தவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் என பலர் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்