மேலும் தனது பழைய நினைவுகளை உருக்கமாக அதில் பதிவிட்டுள்ளார். எனது தாய் தந்தைக்கு நான் ஒரே மகள்தான். எனது தாத்தா ஜெயராமனுக்கும், பாட்டி சந்தியாவுக்கும் நான் ஒரே பேத்தி, எனது அத்தை ஜெயலலிதாவுக்கு நான் ஒரே மருமகள்.
இவர் எனது அண்ணன் மகள் என்று ஜெயலலிதா என்னை அவரது நெருங்கிய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவார். என்னை கைப்பிடித்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்வார். முதல் முறையாக கிரீன் கலர் இம்பாலா காரில் என்னை அழைத்து சென்றார், அதுதான் எனது முதல் கார் பயணம் என்று தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார் தீபா.