ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, திகார் சிறையிலிருந்து 106 நாட்களுக்கு வெளியே வந்த ப.சிதம்பரம் சற்றுமுன் சுதந்திர காற்றை சுவாசித்தார். திகார் சிறையில் வாசலில் அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். இந்நிலையில் இன்று கவிஞர் வைரமுத்து சென்று ப. சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டு அமைப்புகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் பல முறை அவர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செயத நிலையில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றின் எதிர்ப்பால் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்தபோதிலும், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் அவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் இன்று ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சற்றுமுன் 106 நாட்கள் சிறைவாசத்திலிருந்து ப.சிதம்பரம் விடுதலையாகியுள்ளார்.
இந்நிலையில்,இன்று கவிஞர் வைரமுத்து சென்று ப. சிதம்பரத்தை சந்தித்து பேசினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
இன்று காலை ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன்; சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன் என பதிவிட்டுள்ளார்.