ஓகி புயலால் பயங்கர சூறாவளி, மரம் விழுந்து 3 பேர் பலி

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (14:31 IST)
குமரி அருகே தோன்றிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி அந்த புயலுக்கு ஓகி என்று பெயர்  வைத்த்தை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பயங்கர சூறாவளி காற்று வீசியது. 
 
ஓகி புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் அதனால் பொதுமக்கள்  இன்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார்
 
இருப்பினும் ஒருசிலர் வெளியே நடமாடினர். இந்த நிலையில் பயங்கர காற்று காரணமாக மரங்கள் வேறோடு விழுந்தன. இதில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்