குமரியில் குமுறி அடிக்கும் புயல்காற்று: வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை
வியாழன், 30 நவம்பர் 2017 (10:23 IST)
கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதை அடுத்து தற்போது அம்மாவட்டத்தில் புயல்காற்று வீசி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சுமார் 50 முதல் 64 கிமீ வேகத்தில் காற்று வீசி வருவதாகவும், குமரியில் உள்ள கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் புயல் காரணமாக மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குமரி பகுதியில் வீசிவரும் புயல்காற்று குறித்த புகைப்படங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.