சென்னையில் இன்று இரவு கனமழை இருக்காது. தமிழ்நாடு வெதர்மேன்

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2017 (22:59 IST)
ஒரு காலத்தில் மழை செய்தி என்றாலே ரமணன் அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருவார். ஆனால் தற்போது சென்னை வானிலை மைய இயக்குனரின் வானிலை அறிக்கையை விட ஃபேஸ்புக்கில் மழை குறித்து பதிவு செய்யும் தமிழ்நாடு வெதர்மேன் வானிலை அறிக்கை புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நிலையில் இன்று இரவு மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியது என்ன என்று பார்ப்போமா!


 


என்னிடம் ஒரு நல்ல செய்தி ஒன்றும் கெட்ட செய்தி ஒன்றும் இருக்கிறது. சென்னையை நோக்கி பெரு மேகக்கூட்டங்கள் வந்தன. ஆனால், காற்று நம் பக்கம் மேகத்தை உந்தி திருப்புவதற்கு எதிராக அதிக அழுத்தம் கொடுத்துவிட்டதால், மேகக்கூட்டம் வலுவிழந்துவிட்டது. ஆதலால், நமக்கு மிதமான, மழை மட்டுமே இருக்கும். ஆனால், நேரம் செல்ல செல்ல இந்த மிதானமழையின் தீவிரம் சற்று அதிகரிக்கும்..

ஆதலால், மழையின் தீவிரம் அதிகமாகுமேத் தவிர கனமழை இருக்காது. சென்னைக்கு அருகே மிகவும் திரட்சியான மேக்கூட்டங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஆதலால், சென்னையில் இன்று இரவு கனமழை இருக்காது. ஆனால், நேரம் செல்ல செல்ல மழையின் தீவிரம் இருக்கும்.

இன்று ஏராளமானோர் ராடார் குறித்துதெரிந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். மேகக்கூட்டங்கள் வடக்கில் இருந்து தெற்காக செல்கிறது. ஆனால், நமக்கு மட்டும் தவறிவிட்டது. இறுதியில் மேககங்கள் மேற்கில் இருந்து கடற்கரை நோக்கி நகர்கிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை பக்கம் இருப்பதன் காரணமாக மேற்கு நோக்கி மேகங்கள் நகர்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்