வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: மழை தொடர அதிக வாய்ப்பு

திங்கள், 6 நவம்பர் 2017 (12:47 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது., குடியிருப்புகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது



 
 
இந்த நிலையில் ஏற்கனவே வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
இதனால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு வாரத்திற்கும் மேல் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்