மக்களே ஒருநாள் வானிலை அறிக்கையை கணிப்பார்கள்: ரமணனுக்கு வெதர்மேன் பதில்

ஞாயிறு, 5 நவம்பர் 2017 (17:52 IST)
இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக வானிலை அறிக்கையை தெரிவித்து வந்தாலும் ஃபேஸ்புக் மூலம் தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் வானிலை அறிக்கை இணையதளவாசிகளுக்கு பிரபலம் என்பது அறிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் ரமணன் ஒரு பேட்டியில் கூறியபோது,  இணைய வசதியை வைத்துக் கொண்டு ராடாரை பார்த்து மழை தொடர்பான அறிவிப்புகளை செய்வது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையமே அரசால் எச்சரிக்கை மற்றும் முன்னறிவிப்பு போன்ற தகவல்களை முறையாக மக்களுக்கு அளிக்க அதிகாரபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட துறை என்றும் கூறியிருந்தார்




ரமணனின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், 'நான் ஒருபோதும் தவறான தகவல் மூலம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது கிடையாது. இந்திய வானிலை ஆய்வு மையம் தான் அதிகாரபூர்வமானது என்பதில் மாற்று கருத்து கிடையாது.

இருப்பினும் ராடார் மூலம் தற்போதைய நிலையை மட்டும் பிரதிபலிக்க முடியும். முந்தைய இரவே, நான் மழை தொடர்பான முன்னறிவிப்பை செய்து, மழை பெய்யும் பொழுது உடனுக்குடன் நிகழ்நேர நிலைத் தகவல்களையும் பரிமாறுகிறேன்.  விளக்கப்படங்களை பதிவேற்றம் செய்து அதன் மூலம் கணிப்பதை கற்றுக் கொடுக்க முயற்சிக்கிறேன். ஒரு நாள், மக்களே ஆராய்ந்து வானிலை தொடர்பான கணிப்புகளை மேற்கொள்வார்கள். நிச்சயம் அந்த ஒரு நாள் சாத்தியப்படும்! என்று கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்