மீண்டும் வெள்ளம்: பிபிசி வானிலை மையம் எச்சரிக்கை!!

திங்கள், 13 நவம்பர் 2017 (18:55 IST)
தமிழகத்தில் தொடங்கியுள்ள வட கிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் பின் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மழை பொழிவு இல்லை.


 

 
 
இந்நிலையில், தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் இன்னும் 2 நாட்கள் கனமழை பெய்யும் என கடந்த 11ம் தேதி சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. 
 
அதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. வட கடலோர மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 
வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது. 
 
வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
அதேநேரம், சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்