ஏ.டி.எம். பெட்ரோல் பங்க் மூலம் கொரோனா பரவுமா? பிரபல மருத்துவர் தகவல்

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (19:35 IST)
பெட்ரோல் நிலையங்கள் மற்றும் ஏடிஎம்கள் மூலம் கொரோனா பரவுமா? என்பது குறித்து பிரபல சென்னை மருத்துவர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் 
 
கொரனோ வைரஸ் மிக வேகமாக ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் பரவி வந்தாலும் ஏடிஎம் மையங்களில் இருந்தும், ஏடிஎம் கார்டுகளிலிருந்தும் ஒருவருக்கு கொரோனா பரவ வாய்ப்பில்லை என்று அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார் 
 
அதேபோல் பெட்ரோல் நிலையங்களிலும் பரவ வாய்ப்பு இல்லை என்றும், ஷூக்கள், பர்ஸ்கள் ஆகியவற்றின் மூலம் கொரோனா நோய் பரவ வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சென்னையை பொருத்தவரை பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளதாகவும், இருப்பினும் கவனக்குறைவாக யாரும் இருக்க வேண்டாம் என்றும் அதே நேரத்தில் மிகவும் பதட்டமடைய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்றும் வீட்டிற்கு வந்தவுடன் கைகளை கழுவினால் போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பயப்பட வேண்டாம் என்றும் மருத்துவர் அறிவுரையின் படி நடந்து கொள்ளுங்கள் என்றும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 90% பேர் குணமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏடிஎம் மையம் மூலம் கொரோனா பரவாது என்ற தகவல் பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்