அப்டேட் ஆகும் கொரோனா; வருஷத்துக்கு 2 முறை ஊசி! – மருத்துவர்கள் அதிர்ச்சி!

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (11:20 IST)
உலகிலேயே முதன்முறையாக கொரோனா பாதித்து மீண்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா பாதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பல லட்சம் மக்கள் இறந்துள்ளனர். கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பிலிருந்து நான்கு மாதங்களுக்கு முன்னால் மீண்டவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவரது ரத்த மாதிரிகளை சோதித்ததில் இரண்டாவதாக தாக்கியுள்ள கொரோனா மரபணுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மீண்டும் கொரோனா தாக்காது என்ற நம்பிக்கை பொய்யாகியுள்ளது. மேலும் கொரோனா எப்போது வேண்டுமானாலும் தாக்கும் அபாயம் உள்ளதால் உடலில் எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து அதிகரித்து வைத்திருக்க ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் எழலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்