புத்தாண்டு தினத்தில் கோவிலில் வழிபட தடையா? அமைச்சர் சேகர்பாபு தகவல்

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (07:15 IST)
தமிழகத்திலும் ஒமிகிரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நாளை மறுநாள் புத்தாண்டு தினத்தில் கோவில்களில் வழிபாடு எந்தவிதமான தடையும் இல்லை என அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
 
ஆனால் அதே நேரத்தில் புத்தாண்டு அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து மாஸ்க் அணிந்து கோயிலுக்கு வழிபட வேண்டும் என்றும் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் கோவிலுக்கு அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் ஏராளமானோர் அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி கோவில்களில் பக்தர்கள் வழிபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்