இன்னும் சில மணி நேரங்கள்தான்! - அதி தீவிர புயலாக மாறியது ‘நிவர்’

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (17:02 IST)
வங்க கடலில் உருவான நிவர் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை நோக்கி மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் புயலின் வெளிவிளிம்பு பகுதி ஏற்கனவே கரைப்பகுதியை தொட்டு விட்டதாக கூறிய வானிலை ஆய்வு மையம் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் எனவும் கூறியிருந்தது.

இந்நிலையில் கடலூருக்கு 90 கி.மீ தொலைவில் நகர்ந்து வரும் நிவர் அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்