மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த நிர்மலா தேவி வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (14:38 IST)
மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் ஏப்ரல்  26ஆம் தேதி கீழமை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை முடிவடைந்ததாகவும், தீர்ப்பு வரும் 26ஆம் தேதி வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாகா குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்அளித்திருக்கிறார்களா என விளக்கமளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்