67 வயது கோடீஸ்வர பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு..!

Mahendran

வியாழன், 11 ஏப்ரல் 2024 (19:34 IST)
67 வயது கோடீஸ்வர பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை விதித்து வியட்நாம் நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் தொழிலதிபர் மற்றும் ட்ரூங் மை லான்  என்பவர் அந்நாட்டில் மிகப்பெரிய மோசடி வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில் இது குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. 
 
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இந்த தொழிலதிபர்  ட்ரூங் மை லான் தான் நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்த நிலையில் இந்த மோசடி வழக்கு தொடர்பாக 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் 
 
அவர் மீது 12 பில்லியன் டாலர் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் வியட்நாம் நாட்டின் ஜிடிபியை சீர்குலைக்கும் வகையில்  ட்ரூங் மை லான்  நடந்து கொண்டதாகவும் அவரது ஊழல் மன்னிக்க முடியாத குற்றம் ஒன்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்