இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மூல வழக்கான மத்திய குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது என தெரிவித்தனர்.