தமிழக பாஜகவுக்கு புதிய பொறுப்பாளர் நியமனம்!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (21:29 IST)
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக இந்த முறை பாஜக சட்டமன்றத்தில் தனது உறுப்பினர்களை அனுப்பியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது 
 
அதிமுக கூட்டணியில் 30 தொகுதிகளுக்கு மேல் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் பாஜக, குறைந்தது 15 எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் அதிரடி நடவடிக்கையாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
 
மேலும் இணை பொறுப்பாளராக முன்னாள் ராணுவ தளபதி விகே சிங் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதுகுறித்த முறையான அறிவிப்பை பாஜக தலைமை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளரின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் பாஜக தமிழகத்தில் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்