நெல்லை, தூத்துக்குடி, தென்காசி.. ரவுடிகளின் பட்டியல் தயாரிப்பு.. கண்காணிக்கும் பணி தீவிரம்..!

Mahendran
புதன், 10 ஜூலை 2024 (12:39 IST)
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரித்து அவர்களை கண்காணிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. 
 
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில்  1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவினாலும், அடைக்கலம் கொடுத்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
நெல்லை உள்பட மூன்று மாவட்டங்களில் 400 ரவுடிகளை ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ் வீதம் நெருக்கமாக கண்காணிக்கும் பணியை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு சிப்டுகளாக போலீசார் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் ரவுடிகள் 24 மணி நேரமும் கண்காணிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
ரவுடிகளை கண்காணித்து அவர்கள் ஏதேனும் விபரீத செயல் செய்ய முயன்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ரவுடிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை அடுத்து முழுமையாக ரவுடிகளை கட்டுப்படுத்த காவல்துறை களம் இறங்கி உள்ளது. இதுவரை 1750 ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்