அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடங்குவது எப்போது? தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (09:41 IST)
ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சியை தமிழக அரசு ஏற்பாடு செய்து வரும் நிலையில் இந்த ஆண்டு நீட் பயிற்சி தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் இலவச நீட் பயிற்சிக்காக மாநிலம் முழுவதும் 414 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
இந்த பயிற்சி மையங்களில் மொத்தம் 28 ஆயிரத்து 980 மாணவர்களுக்கு பயிற்சி பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் பயிற்சி நவம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்