’நயன்தாரா, விக்னேஷ் சிவன்' திருப்பதி கோவிலில் தரிசனம் !

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (14:15 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் இருவரும் திருப்பதி கோயிலில் சாமி செய்தனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சரத்குமார் நடித்த ஐயா என்ற தமிழ் படத்தில் ஒரு வார்த்தை பேச ஒரு வருசம் காத்திருந்தேன்.. என்ற பாடலுடன் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இருவரும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், இருவரும் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அநேகமாக இவ்வாண்டின் இறுதியில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்