பட்டா கத்தியால் கேக் வெட்டிய ரவுடிகள்...வளைத்துப் பிடித்த போலீஸ் !

வெள்ளி, 4 அக்டோபர் 2019 (21:33 IST)
சென்னையில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி அதை வீடியோ எடுத்த 3 பேரை கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி, சென்னை புளியந்தோப்பி பகுதியில் வசித்து வந்த அய்யப்பன் என்பவர், தனது பிறந்தநாளை முன்னிட்டு, நணபர்கள் மூன்று பேருடன் பட்டா கத்தியைக் கொண்டு கேக் வெட்டிக் கொண்டாடினார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.இந்த நிலையில் மாநகராட்சி ஊழியரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 
அதில், சாமுண்டீஸ்வரன்,சரத்குமார் ,அய்யப்பன்,ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தக் கும்பல்தான் அன்று, பிறந்தநாளுக்கு கத்தியால் கேக் வெட்டியது என்பதையும் உறுதி செய்து, மூவரையும் சிறையில் அடைத்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்