நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்காலதடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (10:58 IST)
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுந்தர்ராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்திருக்கிறது.
 
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை எதிர்த்து  மக்கள் நீண்ட வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 'நியூட்ரினோ ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், நீர், நிலம், காற்று ஆகியவை பாதிக்கப்பட்டு இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்' என்றும், 'இதனால் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள அணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும்' என அவர்கள் கூறி வருகின்றனர்.
 
ஆனால் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுக நிர்வாகி ரவி தீக்குளித்து உயிரிழந்தார்.
 
இந்நிலையில் சுந்தர்ராஜன் என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று இவ்வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்