மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டை தெரிவிக்கின்றன என்றும், தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின்படி மூன்றாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ளலாம் என்று தான் மத்திய அரசு கூறியுள்ளது என்றும், ஹிந்தியை மட்டும் தான் கற்க வேண்டும் என்று மத்திய அரசு எப்போதும் கூறவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
புதிய கல்வி கொள்கை மூலம் மூன்றாவதாக விருப்பப்படும் ஒரு மொழியை கற்கலாம் என்பது நல்ல கொள்கை தான் என்றும், கால சூழல் மாறுதலுக்கு ஏற்ப மூன்றாவது ஒரு மொழியை கற்றுக் கொள்வது நல்லது தான் என்றும் அவர் தெரிவித்தார்.