சிவகங்கை அருகே தலை தீபாவளிக்காக மாமனார் வீட்டிற்கு வந்திருந்த 21 வயதான புதுமணப்பெண் ரூபிகா, தீபாவளி தினத்தில் கணவர் வேலைக்கு சென்றதால் ஏற்பட்ட சண்டையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் ரூபிகாவுக்கும் கடந்த ஜூலையில் திருமணம் நடந்தது. தலை தீபாவளிக்காக சென்ற நிலையில், கணவர் பாண்டி வேலைக்கு செல்ல போவதாகக் கூறியுள்ளார். "மேலும் இரண்டு நாட்கள் இங்கேயே தங்கலாம்" என்று ரூபிகா கூறியதை பாண்டி ஏற்காததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பாண்டி வேலைக்கு சென்ற கோபத்தில், ரூபிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணமான மூன்று மாதங்களுக்குள் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதால், இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.