விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, "தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் வேட்டு வைக்கும் திட்டம் தான் தேசிய கல்விக் கொள்கை. அதில் பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், பணம் கிடைக்கும் என்பதற்காக கையெழுத்து இட மாட்டேன். கையெழுத்திடும் அந்த பாவத்தை இந்த ஸ்டாலின் செய்ய மாட்டான்" என்று தெரிவித்தார்.
"நாங்கள் இந்திக்கு எதிரி அல்ல. அதை படிப்பதை தமிழ்நாடு ஒருபோதும் தடுத்ததில்லை. ஆனால் எங்கள் மொழியை அழிக்க நினைத்தால், ஆதிக்கம் செய்ய நினைத்தால் விட மாட்டோம். மொழி திணிப்புக்கு எதிராக நாங்கள் 80 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம்.