கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

Mahendran

வியாழன், 23 அக்டோபர் 2025 (15:59 IST)
கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சிபிஐ தனது முதல் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
 
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், குஜராத்தை சேர்ந்த எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட சிபிஐ குழு, அக்டோபர் 15 முதல் கரூரில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்த சிபிஐ, வனத்துறையினரிடமும் விசாரணை நடத்தியது.
 
கடந்த எட்டு நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சிபிஐ குழுவினர் இன்று தங்கள் முதல் விசாரணை அறிக்கையை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1ல் நீதிபதி பரத் குமார் முன் தாக்கல் செய்தனர்.
 
மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட ஒரு மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இன்று அல்லது நாளை கரூர் வந்து சிபிஐ விசாரணையை கண்காணிக்க உள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்