செய்யக்கூடாத பாவத்தை செய்த முதல்வர்: நாஞ்சில் சம்பத் தடாலடி!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (09:00 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகா புஷ்கர விழாவையொட்டி நேற்று மயிலாடுதுறையில் உள்ள துலா ஆலயம் அருகில் காவிரியில் புனித நீராடினார். இதனை தினகரன் ஆதரவு முன்னணி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.


 
 
திருநெல்வேலியில் நேற்று நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பேசிய அவர், ஆளுநர்கள் என்பதே மத்திய அரசின் கங்காணிகள்தான். மாநில மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் தான்தோன்றித்தனமான நடவடிக்கைக்கு ஆளுநர் செவி சாய்த்திருப்பது கொடூரமானது.
 
சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ஜனநாயகத்தைச் சிரச்சேதம் செய்ய துணிந்துவிட்டார். சபாநாயகர், முதல்வர், ஆளுநர் ஆகியோர் சேர்ந்து இந்த ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள். சபாநாயகர் தனபால் வரலாற்றுப் பழியைச் செய்திருக்கிறார்.
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் காவிரியில் நீராடியிருப்பதன் மூலம் காவிரி அழுக்காகி விட்டது. அவர்கள் செய்யக்கூடாத பாவங்களைச் செய்துவிட்டு எந்தத் தீர்த்தத்தில் குளித்தாலும் புண்ணியம் கிடைக்கப் போவதில்லை என தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்