நாஞ்சில் சம்பத் காரை தாக்கிய பாஜகவினர்: கடலூரில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:28 IST)
நாஞ்சில் சம்பத் காரை பாஜகவினர் தாக்க முயற்சித்ததை அடுத்து போலீசார் தகுந்த பாதுகாப்புடன் நாஞ்சில் சம்பத்தை அனுப்பி வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது 
 
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க நாஞ்சில் சம்பத் வருகை தந்தார். அவரது வருகையை அறிந்த பாஜகவினர், சமீபத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக பேசியதாக நாஞ்சில் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் காரை வழிமறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கூறிய நிலையில் அவரது காரை தாக்க முயன்றனர். இதனையடுத்து போலீசார் தகுந்த பாதுகாப்புடன் நாஞ்சில் சம்பத்தை அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்