எனது காரை தாராளமாக எடுத்து செல்லுங்கள், ஆனால்.. உதயநிதியின் கலகல பேச்சு

வியாழன், 21 ஏப்ரல் 2022 (19:20 IST)
எனது காரை தாராளமாக எடுத்துச் செல்லுங்கள் ஆனால் தயவுசெய்து கமலாலயம் மட்டும் சொல்லாதீர்கள் என உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சட்டமன்றத்தில் பேசியது கலகலப்பாக இருந்தது
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உதயநிதியின் காரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி ஏற முயன்றார். இதனை அடுத்து அவர் சுதாரித்து தனது காரில் சென்றார் 
 
அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி காரிலும் தான் ஏற முயன்றதாக கூறிய உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய காரை நீங்கள் தாராளமாக எடுத்துச் செல்லலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் கமலாலயம் பக்கம் செல்ல வேண்டாம் என்றும் கூறினார்
 
அதற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் எங்களுடைய பாதை எப்போதும் எம்ஜிஆர் வழியில் தான் இருக்கும் என்றும் அதைவிட்டு எப்போதும் மாறாது என்றும் அவர் தெரிவித்தார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்