தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்

வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:55 IST)
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை பாஜக எம்.பி ஒருவர் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி, ஸ்மிருதி இராணி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் வியூக நிபுணராகப் பணியாற்றியவர் பிரஷாந்த் கிஷோர்.

கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி அனைத்து மா நிலங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

சமீபத்தில் நடந்த 4 மா நில தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது அக்கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து பிரசாஷ் கிஷோர் காங்கிரஸ் கட்சிதலைவர்களை சந்தித்து விசாரித்தார். இன்னும் சில நாட்களில் அவர்  காங்கிரஸில் இணைவார் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மேற்கு வங்க பாஜக எம்பி, திலீப்கோஷ், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்., இணைந்துள்ளார். அவர் எந்தெந்தக் கட்சியில் வேலை செய்தாலும் அந்தக் கட்சிகளில் உறுப்பினர் அட்டை பெற்றுவார். என விமர்சித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்