தமிழிசையை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: நாடார் சங்கம் கண்டன போஸ்டர்..!

Siva

வியாழன், 13 ஜூன் 2024 (13:08 IST)
நேற்று ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழிசையை அமைச்சர் அமித்ஷா கண்டித்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது நாடார் சங்கம் வெளியிட்டுள்ள போஸ்டரில் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
நாடார் குல மகளான அன்பு சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் முன்னாள் கவர்னர் என்றும் பாராமல் பொது மேடையில் வைத்து அவமதித்த அமித்ஷாவையும் அதற்கு காரணமான அண்ணாமலையையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
 
உடனடியாக அவர்கள் இருவரும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் தமிழ்நாடு தழுவிய நாடார் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறோம் என திருநெல்வேலி மாவட்ட நாடார் மகாஜன சங்கம் போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்