அமித்ஷா என்ன சொன்னார்.? ஆள விட்றா.! கையெடுத்து கும்பிட்ட தமிழிசை..!

Senthil Velan

புதன், 12 ஜூன் 2024 (17:28 IST)
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித்ஷா கண்டித்தாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழிசை சௌந்தர்ராஜன் பதில் அளிக்காமல் கையெடுத்து கும்பிட்டு விட்டு காரில் சென்றார்.
 
தெலுங்கானா முதல்வராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வந்திருந்தனர்.  நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, விழா மேடைக்கு வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டு கிளம்பினார். 
 
அப்போது அவரை அழைத்த அமித் ஷா, தமிழிசையிடம் ஏதோ சொல்ல அதற்கு தமிழிசையும் கணிவான முறையில் பதிலளித்தார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத அமித் ஷா, காட்டமாக பேசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பதிவேற்பு விழாவில் பங்கேற்று விட்டு, சென்னை விமான நிலையம் வந்தார் தமிழிசை. அப்போது மேடையில் அமித்ஷா, தங்களிடம் என்ன கூறினார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு அவர் பதில் அளிக்காமல், கையெடுத்து கும்பிட்டு விட்டு காரில் கிளம்பி சென்றார்.
 
அமிஷாவுக்கு கேரள காங்கிரஸ் கண்டனம்:
 
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை அமித் ஷா கண்டித்ததற்கு கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்களை அவமதிக்கும் பாஜகவின் கலாச்சாரத்தை அமித் ஷாவின் செயல்பாடு பிரதிபலிப்பதாக கேரள காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ALSO READ: குவைத் தீ விபத்து.! பலியான 40 பேரும் இந்தியர்கள்.! அதிர்ச்சி தகவல்...!

சுயமரியாதை உள்ளவராக இருந்தால் தக்க பதிலடி கொடுத்துவிட்டு பாஜகவில் இருந்து தமிழிசை விலகி இருக்க வேண்டும் எனவும் மருத்துவர் மற்றும் முன்னாள் ஆளுநரான தமிழிசை இதுபோன்ற அவமதிப்பை சகித்துக் கொள்ளக் கூடாது எனவும் கேரள காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்