தமிழிசையை கண்டித்த அமித்ஷாவுக்கு காங்கிரஸ், திமுக கண்டனம்..!

Mahendran

புதன், 12 ஜூன் 2024 (15:50 IST)
இன்று நடைபெற்ற சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதற்கு காங்கிரஸ் மற்றும் திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கேரளா காங்கிரஸ் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் ’இதுதான் பெண்களுக்கு எதிரான பாஜகவின் கலாச்சாரம் மற்றும் நடத்தை என்றும் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் தக்க பதிலடி கொடுத்து தமிழிசை கட்சியிலிருந்து விலக வேண்டும் என்றும் நீங்கள் ஒரு மருத்துவர், முன்னாள் ஆளுநர், இப்படி அவமானப்படுவதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, குற்றவாளிகளிடமிருந்து இது போன்ற அவமதிப்பை சகித்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் 
 
அதேபோல் திமுகவை சேர்ந்த சரவணன் அண்ணாதுரை இது குறித்து கூறிய போது ’இது என்ன வகையான அரசியல், தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான பெண் அரசியல்வாதியை மேடையில் வைத்து கடுமையான சொற்களை மிரட்டும் உடல் மொழியை வெளிப்படுத்துவது நாகரீகமா, எல்லோரும் இதனை பார்ப்பார்கள் என்பதை அறியாதவரா அமித்ஷா, மிகவும் தவறான உதாரணம்’ என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்