சுகன்யாவின் வீட்டை அபகரித்த நாம் தமிழர் நிர்வாகி?

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (10:43 IST)
நடிகை சுகன்யாவின் வீட்டை வாடகைக்கு எடுத்த நம் தமிழர் கட்சியின் நிர்வாகி, அந்த வீட்டை காலி செய்ய மறுத்து வருவதால், சுகன்யா மன உளைசலுக்கு ஆளாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
சின்ன கவுண்டர், இந்தியன், வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சுகன்யா. இவருக்கு பெசண்ட்நகரில் ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டில் தற்போது சீமானின் நம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், வழக்கறிஞருமான ஒருவர் குடியிருந்து வருகிறார்.
 
சில மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டை நாம் தமிழர் கட்சி அலுவலகமாக அந்த நிர்வாகி மாற்றியுள்ளார். அதனால், அங்கு கட்சி கொடி மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுகன்யா, அந்த வீட்டை காலி செய்து விடுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், வீட்டை காலி செய்ய மறுத்த வழக்கறிஞர், வாடகை கொடுப்பதையும் நிறுத்தி விட்டாராம்.
 
இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் சுகன்யா தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே, கட்சி தரப்பிலிருந்து சுகன்யாவிடம் சமாதானம் பேசப்பட்டதாம். அதில், நிலுவையில் உள்ள வாடகையை கேட்க வேண்டும். வேண்டுமானால், வீட்டை காலி செய்து கொடுத்து விடுகிறோம் எனக் கூறினார்களாம். இதனால், சுகன்யா கடும் மனக் கஷ்டத்தில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்