அரசியல் வருகைக் குறித்த கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் ரஜினியைப் போல தான் அல்ல என்றும் அரசியலில் தனது நிலைப்பாடு என்ன என்றும் விளக்கியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் உலகளவில் தகர்க்க முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இப்போது பெங்களூர் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருக்கிறார்.
இலங்கைத் தமிழரான அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனது அரசியல் வருகைக் குறித்து பேசியுள்ளார். அதில் ரஜினியை உதாரணமாகப் பேசியுள்ளது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அந்த வீடியோவில் நிரூபர் ஒருவர் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு ‘ அய்யோ இவர் அரசியலுக்கு வருகிறாரா? இந்தியாவில் ரஜினி சொல்வது போலதான் வார்றனா? வர்றளயா? வார்றனா? வர்றளயா? அந்த மாதிரிலாம் நாமப் பண்றது இல்ல. நமக்கு அர்சியல்ல எனக்கு ஆர்வம் இல்ல’ எனக் கூறியுள்ளார்.
இது தற்போதைய நேர்காணலா அல்லது முந்தைய நேர்காணலா என்ற விவரம் தெரியாத போதும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ரஜினி அரசியலில் களமிறங்கப் போவதாக அறிவித்து ஓராண்டு ஆகியும் இன்னும் கட்சி ஆரம்பிக்காமல் இழுத்தடித்து வரும் நிலையில் இந்த வீடியோ இன்றைய சூழ்நிலைக்கும் கனக்கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.