பொங்கலுக்கு பிறகு ரஜினி கட்சி ஆரம்பிப்பார் : சத்யநாராயணராவ் ’ஒப்பன் டாக்’

திங்கள், 7 ஜனவரி 2019 (18:48 IST)
இதோ வருகிறேன்... அதோ வருகிறேன் என ஒருவழியாக அரசியல் அறிவிப்பை அறிவித்து விட்டார் ரஜினி. ஆனால் இன்னும் கட்சி தொடங்காமல் ரசிகர்களை காத்திருக்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில் அவரது ஒவ்வொரு படமாக ரிலீஸாகிக் கொண்டிருக்கிறது. அவரது நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் வெறுமனே சொன்னதுடன் நிற்காமல் மக்கள் நீதி மய்யம் என்ற  கட்சியைத் தொடங்கி பம்பரமாக சுழன்று வருகிறார். இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று அறிவிப்பு விடுத்தார்.
 
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணராவ் கர்நாடக மாநில தலைவர் சந்திரகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
 
பின்னார் சத்ய நாராயணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் . அவர் கூறியதாவது:
 
’ரஜினி பொங்கலுக்கு பிறகு அரசியல் கட்சி , கொடி , கொள்கை சம்பந்தமான முடிவுகளை அறிவிப்பார் . இவ்வாறு அவர் கூறினார்.’

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்