ஓரினச்சேர்க்கை ஒரு பாவச்செயல் - முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (11:37 IST)
ஓரினச்சேர்க்கையே ஒரு பாவச்செயல் என்றும் அதற்கு ஆதரவாக வந்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதைவிட பாவச்செயல் என்றும் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் கூறியுள்ளார்.
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ரத்து செய்யப்படுகிறது எனவும் உச்சநீதிமன்றம் நேற்று அதிரடியாக தீர்ப்பளித்தது. மேலும் இயற்கை எது என்பதை நாம் தீர்மானிக்க கூடாது என்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக நடந்து வந்த நாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த தீர்ப்பை பலர் ஆதரித்தும், பலர் எதிர்த்தும் வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒரு பாவச்செயல், இந்த தீர்ப்பு இந்திய பண்பாட்டை சீர்குலைத்துள்ளது. இனி உலக நாடுகள் இந்தியாவை எல்லிநகையாடப்போகிறது. இந்த தீர்ப்பு பெரும்பாலான மக்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது என அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்