அதன்படி அவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை நிறை வேற்றப்பட்டது. மலேசியாவில் பெண்களுக்கு இவ்வாறு தண்டனை கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர், மக்களை துன்புறுத்தவோ காயப்படுத்தவோ இந்த தண்டனை வழங்கப்படவில்லை, இவ்வாறு இனி நடக்கக்கூடாது என பொதுமக்களுக்கு உணர்த்தவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றார். இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.